வகைப்படுத்தப்படாத

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

(UTV|JAPAN)-ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று(06) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை சுமார் 40ஆக உயர்வடைந்துள்ளது.

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவில் இன்று(06) அதிகாலை 3.08 மணியளவில், 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் சுமார் 40Km ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படாத போதும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 மில்லியன் வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பேரழிவு மேலாண்மை நிறுவனம், நிலநடுக்கத்தால் அட்ஷூமா பகுதியில் பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிலுள்ள டோமரி அணுமின்நிலையத்தில் இயங்கி வரும் மூன்று உலைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும், மாற்று ஜெனரேட்டர் வசதியுடன் மின்சாரம் வழங்கப்படும் என ஜப்பான் அணுமின்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு வசதிகளும் இந்நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Sri Lanka to honour retired quick Kulasekara tomorrow

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்

விரைவில் பணிக்கு திரும்புவேன்…