உள்நாடு

Update – உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபரும், ஆசிரியரும் விளக்கமறியலில்

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, கைதான மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் இருவரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு

மேலும் 303 பேர் இன்று குணம்

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு