கிசு கிசு

UNP தேசியப் பட்டியலுக்கு ஜோன் பெயரீடு

(UTV | கொழும்பு) – நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர்கள் பட்டியலில் முதலில் உள்வாங்கப்பட்டுள்ள நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் அமரதுங்க அண்மைக்காலமாக தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் நிறைவுற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் இன்னும் வெறுமையாக இருக்கின்றமையும் அதற்காக கட்சியினுள் உட்பூசல்கள் நிலவி வருகின்றமையும் பொதுவாக அறிந்ததொன்றே.

Related posts

மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.

மஹிந்த வைத்தியசாலையில்… – மறுக்கும் டுவிட்டர் பதிவு

தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுகிறது?