வகைப்படுத்தப்படாத

UNP சிறிகொத தலைமையகத்தின் யானை மீது துப்பாக்கிச் சூடு – காவற்துறை அதிகாரியொருவர் கைது

புறக்கோட்டையில் அமைந்துள்ள சிறிகொத ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் உள்ள யானை சின்னத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட காவற்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த காவற்துறை அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் புறக்கோட்டையில் எபிடமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள நபர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் உந்துருளியில் வந்த குறித்த காவற்துறை அதிகாரி அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்ததை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் , வழமையைப் போல குறித்த செயலாளரின் வீட்டிற்கு சென்று கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனநலம் குறித்த மருத்துவ அறிக்கையொன்றை பெறவுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில ்மிரிஹான காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Related posts

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள்

தீயில் சிக்கிய நாயை மீட்க போன நபர் பலி!

England win Cricket World Cup