உள்நாடு

TNA உறுபினர்களுடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு

(UTV|கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ்க்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

editor

ஐ.எஸ் நபர்கள் கைது: இலங்கை வரும் இந்தியாவின் பொலிஸ் பிரிவு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்கு