உள்நாடு

TIN இலக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமைப்போன்று இடம்பெறும் நிலையில், பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன் பேரின் சுய விபர தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று கூறிய இராஜாங்க அமைச்சர், இதன் மூலம் நாட்டில் அரச வருமானம் குறித்த தெளிவான தரவு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இசுறுபாய அலுவலகம் இன்று மீளவும் வழமைக்கு

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!