விளையாட்டு

The Hundred கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல நியமனம்

(UTVNEWS|COLOMBO) – 2020ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அணிக்கு 100 பந்துகள் கொண்ட வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட குறித்த இந்த கிரிக்கெட் தொடர் த ஹன்ரட் (The Hundred) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், குறித்த கிரிக்கெட் தொடரில் சௌத்தம்ப்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து ஆடவுள்ள ஆடவர் (Men) கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சௌத்தம்ப்டன் நகரினை பிரதிநிதித்துவம் செய்து த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் ஆடும் மகளிர் அணியின் பயிற்சியாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சரோலட் எட்வார்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது