விளையாட்டு

T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று(27) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன நீக்கப்பட்டு லசித் மாலிங்க, மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடரில் இலங்கை தரப்பினை வழிநடாத்தவுள்ளார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 04ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 06ஆம் திகதியும் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம் :
லசித் மாலிங்க (அணித்தலைவர்)
குசல் பெரேரா
அவிஷ்க பெர்னாந்து
நிரோஷன் டிக்வெல்ல
அஞ்செலோ மெதிவ்ஸ்
குசல் மெண்டிஸ்
தனன்ஞய டி சில்வா
ஷெஹான் ஜயசூரிய
வனிந்து ஹஸரங்க
தசுன் ஷானக்க
திசர பெரேரா
லக்ஷான் சந்தகன்
நுவன் பிரதீப்
இசுரு உதான
லஹிரு குமார

Related posts

பாகிஸ்தான் , மே.இ.தீவுகள் டெஸ்ட் கிரிக்கட் போட்டி

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று