விளையாட்டு

T20 WorldCup : சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று(23) ஆரம்பமாகின்றன.

அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று பிற்பகல் மோதவுள்ளன.

அதேபோல இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.

இந்த சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளைய தினம் சார்ஜாவில் நடைபெறவுள்ளதுடன் இதில் பங்களாதேஷ் அணியை இலங்கை எதிர்த்தாட உள்ளது.

சூப்பர் 12 போட்டிகளில் குழு 1 மற்றும் குழு 2 என்ற அடிப்படையில் குழுக்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

குழு 1 : இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்

குழு 2 : இந்தியா, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

அதற்கமைய முதலாம் சுற்றின் குழு (ஏ) இலிருந்து இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

அதேபோல குழு (பி)இலிருந்து ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.

Related posts

நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி

அனைத்து தரவுகளும் என்னிடம் உள்ளது – தயாசிறி அதிரடி கருத்து

உலகின் முதலாவது வீரர் ரொஜர் பெனிஸ்டர் காலமானார்