விளையாட்டு

T20 போட்டியிலிருந்து 2 வேகப்பந்து வீச்சாளர்கள் நீக்கம்

(UTV|கொழும்பு)- மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் தொடரின்போது இருவரும் உபாதைக்குள்ளானமை காரணத்தினால் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுவன் பிரதீப்புக்கு 6 வார காலம் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுவன் பிரதீப்புக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ, அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக இருபதுக்கு 20 அணியில் இணைத்துக்கொள்ளப்படும் வீரர் இதுவரை பெயரிடப்படவில்லை.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டி நாளை(04) பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக போட்டி ஒத்திவைப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு

ரசிகர்களுக்கு அனுமதியில்லை