விளையாட்டு

T20 தொடரில் நியூசிலாந்துடன் மோதவிருக்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – T20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவிருக்கும் 12 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் வீரர்கள் குழாம் இன்று(25) வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் தற்போது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த டெஸ்ட் தொடரின் பின்னர், இலங்கை நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்த T20 தொடருக்கு முன்னர், கட்டுநாயக்க MCG மைதானத்தில் வைத்து நியூசிலாந்து அணி இம்மாதம் 29ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் பயிற்சி T20 போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது.

இலங்கை குழாம்:
அஷான் பிரியஞ்சன்(அணித்தலைவர்),
தனுஷ்க குணத்திலக்க,
சதீர சமரவிக்ரம (விக்கெட்காப்பாளர்),
பானுக்க ராஜபக்ஷ,
அஞ்செலோ பெரேரா,
ஷெஹான் ஜயசூரிய,
தசுன் ஷானக்க,
வனிந்து ஹஸரங்க,
லஹிரு மதுசங்க,
நுவான் பிரதீப்,
லக்ஷான் சந்தகன்,
கசுன் ராஜித

Related posts

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை

கொல்கத்தா அணியிலும் கொரோனா

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்