விளையாட்டு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று

(UTV | கொழும்பு) –  ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(17) ஆரம்பமாகின்றது.

16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதுவரை 6 தடவைகள் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 தடவையும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு முறையும் வெற்றிக்கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாடவுள்ளன.

இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி காண் சுற்றில் விளையாடவுள்ளன.

இதிலிருந்து 4 அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

ஆரம்ப நாளான இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன்படி, ஓமான் மற்றும் பப்புவா நியுகினி ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் முதலாவது போட்டி இன்று மாலை 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

இந்திய மகளிர் அணி வெற்றி