விளையாட்டு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

(UTV|அவுஸ்திரேலியா) – 2020 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான 20 இற்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IPL தொடரில் இருந்து ப்ராவோ விலகல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்

இலங்கை அணியை துவம்சம் செய்வது இங்கிலாந்து அணி