வணிகம்

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

(UTV | கொழும்பு) –புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான vivo, அதிசிறந்த செல்பி கெமராவுடன் கூடிய  மேலுமொரு முதற்தர ஸ்மார்ட்போனான V19 ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

vivo V19 மீண்டும் செல்பி கெமராக்களுக்கான ஒரு புதிய அளவுகோலை நிர்ணயிக்கவுள்ளதுடன், இச்சாதனமானது  கிடைக்கக்கூடிய ஒளியையும் மீறி, பிடிக்கும் ஒவ்வொரு படத்தையும் சிறப்பானதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 32+8MP dual front  செல்பி கெமரா மற்றும் 48MP AI quad-lens பின்பக்க கெமராக்களை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புற கெமரா அமைப்புகள் வெவ்வேறு வெளிச்ச நிலைகளைக் கொண்ட சந்தர்ப்பங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்,  மிகவும் சவாலான வெளிச்சம் கொண்ட சூழ்நிலைகளிலும்  ஸ்டூடியோ தரத்துக்கு இணையாக செல்ஃபிக்களை அனுபவித்து மகிழ முடியும்.

vivo V19  ஸ்மார்ட்போனானது ‘Super Night Selfie’ சிறப்பம்சத்தின் மூலம் குறைந்த ஒளி கொண்ட காட்சி நிலைகளில் கூட நன்கு வெளிச்சமான படங்களை உறுதி செய்யும். இவ்வாறாக, V19 கெமராவினால் குறைந்த ஒளி செல்பிக்களில், 14 வெவ்வேறு பிரேம்களை multiple exposure values அடிப்படையில் இணைக்கும் ‘Multiple-Exposure’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவிலான வெளிச்சத்தை அடைய முடியும். இந்த செல்பி முயற்சிக்கு வலுசேர்க்கும் முகமாக V19 சாதனமானது ‘Aura Screen Light’ சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளதுடன், இது போனின் திரையை வெளிச்சமாக்குவதன் மூலம் மேலும் சாதகமான ஒளி நிலைமைகளை உருவாக்குகிறது.

2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V17 Pro விற்கு அடுத்த வெளியீடே V19 ஆகும்.  இந்த போனுக்கான உத்தியோகபூர்வ வெளியீட்டுத் தினம் அறிவிக்கப்படாத போதிலும், ஜூன் மாத இறுதியில் இலங்கையில் அறிமுகப்படவுள்ளது. இதன் முன்பக்க கமெராவானது இரட்டை punch-hole அமைப்பைக் கொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக, vivo V19 ஆனது quad-camera தொகுதியை பின்பக்கத்தில் கொண்டுள்ளதுடன், AMOLED திரை மற்றும் திரையுனுள் அமைந்த கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இச் சாதனத்தின் முதல் லென்ஸின் மேல் flash பொருத்தப்பட்டுள்ளதுடன், முன்பக்க இரட்டை punch-hole அமைப்பானது வலது பக்கத்தின் மேற்புறத்தில் உள்ளது.

vivo Mobile Lanka விற்கு இணங்க, V19 இன் திரையானது இதன் அதி சிறந்த கமெரா தொகுதியைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் ‘Dual iView Display’ உடன் கூடியதுடன், E3 OLED இன் மூலம் தயாரிக்கப்பட்ட 6.44 அங்குல LIV Super AMOLED FHD+ திரையைக் கொண்டுள்ளது. இதன் 100% DCI-P3 color gamut திரையானது பிரகாசமான மற்றும் அசல் வண்ணங்களை வழங்குகின்றது.

மேலும் வெளிவரவுள்ள vivo V19 இன் மற்றொரு முக்கிய அம்சம் விண்வெளியினை அடிப்படையாகக் கொண்ட அதன் தனித்துவமான நிறத் தெரிவுகளாகும். According to vivo Mobile Lankaவிற்கு இணங்க, இது ‘Gleam Black’ மற்றும் ‘Sleek Silver’  ஆகிய நிறத்தெரிவுகளில் கிடைக்கவுள்ளது.

இந்த சாதனமானது Qualcomm Snapdragon 712 AIE SoC இனால் வலுவூட்டப்படுகின்றது. 8 ஜிபியுடன் கூடிய octa-core chipset சிப்செட் மற்றும் 128GB/256GB உள்ளக நினைவகமானது சீரான, தடையின்றிய பன்முக செயற்பாட்டுக்கு உத்தரவாதமளிக்கின்றது. உயர் தர high-end SoC மற்றும் திறன்கொண்ட RAM-ROM ஆகிய இரண்டின் இணைப்பும் V19 இன் சீரான நாளாந்த செயற்பாடுகளை உறுதி செய்கின்றது. கொவிட் – 19 தொற்று நிலைமை காரணமாக இந்த புதுமையான ஸ்மார்ட் சாதனத்தின் வெளியீடு தாமதமாகியதுடன், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் முன்னதாக இலங்கையில் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு மேம்பட்ட சந்தை போக்கை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது. அந்த வகையில், V19 இன் அறிமுகமானது, நுகர்வோர் நடவடிக்கைகளில் நாடு பூராகவும் நிலவிய ஸ்தம்பித நிலையின் பின்னரான உள்நாட்டு சந்தையில் அவர்கள் மீண்டும் நுழைவதைக் குறிக்கின்றது.

Related posts

ரயில் சேவையில் 800 கோடி ரூபாய் நட்டம்

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி