உள்நாடு

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் பலி

(UTV | கொழும்பு) – நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ நகரில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினரையும், அவரது வாகனத்தையும் தாக்குவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் தாம் பயணித்த வாகனத்திலிருந்து அடைக்களம் தேடி தப்பிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிரீவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு அடைக்களம் தேடி, தப்பிச் சென்ற இருவரும் பின்னர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை. நகர மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை வீதி நடுவே கவிழ்த்து தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ரவிக்கு எதிரான வழக்கு : ஏப்ரல் 27இல் சாட்சிய விசாரணை ஆரம்பம்

இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்

editor

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்