உள்நாடு

SLPP தேசியப் பட்டியலுக்கு பசிலின் பெயர் பரிந்துரை

(UTV | கொழும்பு) –    ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் பெயர் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று முற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இவரின் இராஜினாமாவால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக பசில் ராஜபக்ஸவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

வேன் மோதி தந்தையும் மகளும் பலி

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு