உள்நாடு

SLFP இனது 71வது ஆண்டு நிறைவு விழா இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 71வது ஆண்டு நிறைவு விழா இன்று.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா தலைமையில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

71வது ஆண்டு நிறைவு விழா மாநாடு இன்று (02) பிற்பகல் 1.30 மணிக்கு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.

நமது அபிலாஷைகளுக்கு உயிர் கொடுப்போம் – சவாலை கையில் எடுப்போம் – சகாப்தத்தின் பணிக்கு தோள் கொடுப்போம் என்பது இந்த ஆண்டு அதன் கருப்பொருளாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இந்த வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இன்று கட்சியின் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

நாமலின் சட்டப் பட்டம் போலியானது என்கிறார் துஷார ஜயரத்ன

editor

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ