உள்நாடு

SLFP கோரிக்கையும்; விமல், கம்மன்பில, வாசுவின் தீர்மானமும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இம்முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கள் அன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது கட்சிகளின் யோசனைகளும் பரிந்துரைகளும் கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது வாக்குறுதி அரசியலே – ரணில் விக்ரமசிங்க