உலகின் இரண்டு தசாப்த காலம் பிரபலமான காணொலி அழைப்பு சேவையான ஸ்கைப் (Skype) இம்மாதம் முதல் மூடப்படும் என்று இதனை முன்னெடுத்துவரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Skype நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் மே மாதம் முதல் தனது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, தற்போது ஸ்கைப்பை பயன்படுத்துவோர் தங்கள் பழைய அழைப்புத் தகவலைப் பராமரிக்கும் அதேவேளையில், மைக்ரோசொப்டுடன் இணைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக தற்போது ஸ்கைப்பை பயன்படுத்துவோர் அவர்களின் கடவுச்சொல்லைக்கொண்டு அதேபோன்று Microsoft Teams வுடன் இணைந்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று நோய்க்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வந்தது ஸ்கைப்பின் பயனர் தளத்திற்கு பதிலாக, Zoom போன்ற புதிய காணொலி தொழில் நுட்பங்கள் அதிகரித்தன.
2003 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட ஸ்கைப் பயன்பாட்டை, 2011 ஆம் ஆண்டு மைக்ரோசொப் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது.
உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் கணினிகள் மூலம் இலவச காணொலி மற்றும் Audio அழைப்புகளை மேற்கொள்வதை ஸ்கைப் சாத்தியமாக்கியது.
2003 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட ஸ்கைப் பயன்பாட்டை, 2011 ஆம் ஆண்டு மைக்ரோசொப் 8.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்முதல் செய்தது.
உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் கணினிகள் மூலம் இலவச காணொலி மற்றும் Audio அழைப்புகளை மேற்கொள்வதை ஸ்கைப் சாத்தியமாக்கியமை குறிப்பிடத்தக்கது.