உள்நாடுசூடான செய்திகள் 1

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு நான் வந்தேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் தான் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி அன்று கூறியது.சிறிகொத்த மாத்திரம் தான் எம்மிடம் இல்லை என்றார்கள். எமக்கு அதிகாரத்தை தாருங்கள் சிறிகொத்தவை கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி கூறியது. ஆனால் தற்போது ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட மொட்டுக் குழுவுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.

இன்று சஜித்துடன் ரஞ்சித் மத்துமபண்டார மட்டுமே அமர்ந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வேறு யாரும் அங்கு இல்லை.

இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. அப்படியானால் இன்று அவர்களை ஐக்கிய தேசியக் கட்சி என்று அழைக்க முடியாது. கடந்த தேர்தலில் உண்மையான


ஐக்கிய தேசியக் கட்சி தங்களிடம் இருப்பதாக கூறினார்கள். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒருபகுதியினர் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இப்போது ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட மொட்டுக் கட்சியினருக்கு ஐக்கிய மக்கள் சக்தி சரணடைந்துள்ள நிலையில், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி என்று எப்படி சொல்ல முடியும். அதனால் கிராமங்களில் ஜ.தே.கவினர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏமாந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி அணிதிரள வேண்டும் என்றார்

Related posts

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

கடவத்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!