விளையாட்டு

RR – MI அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

(UTV | கொழும்பு) – இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 51 ஆவது போட்டி இன்று (05) இடம்பெறவுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ரோயல் அணி புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிளேஓஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை பெறுவதற்கு, இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக இது அமையவுள்ளது.

Related posts

இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

பார்சிலோனா பயிற்சியாளர் நீக்கம்