வணிகம்

Rakuten Viber ஊடாக நான்கு மடங்கு அதிகமான அழைப்புகள் பதிவு

(UTV | கொழும்பு) – COVID-19 இடர் காலப்பகுதியில் முன்னணி தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய app இன் பாவனை பெருமளவு அதிகரிப்பு.

உலகின் சிறந்த தொடர்பாடல் கட்டமைப்புகளில் ஒன்றான  Rakuten Viber, COVID-19 தொற்றுப் பரவும் இந்த இடர் காலப்பகுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சக ஊழியர்கள் மற்றும் பங்காளர்களை தொடர்ச்சியாக இணைப்பில் வைத்திருப்பதற்காக பல புதிய அறிமுகங்களை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் மற்றும் வீடுகளில் இருக்கும் முறை பின்பற்றப்படும் நிலையில், Viber இன் புதிய டிஜிட்டல் உள்ளம்சங்களினூடாக மக்கள் ஒன்றிணைக்கப்படுவதுடன், தற்போதைய சூழலுக்கு பொருந்தக்கூடிய வகையில் நேர்த்தியான மனநிலையை உருவாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் app பாவனையில் பெருமளவு அதிகரிப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களில் Viber இல் பாவனையாளர்களின் ஈடுபாடு பெருமளவு அதிகரித்திருந்தது. தற்போது பாவனையாளர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ள உள்ளம்சங்களில் குரூப் மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் திகழ்கின்றன. முன்னரை விட 134% அதிகம் குரூப் மெசேஜ்கள் பகிரப்பட்டுள்ளன.

சராசரியாக Viber இல் மேற்கொள்ளப்பட்ட குரூப் அழைப்புகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் 370% ஆல் அதிகரித்திருந்தது. சமூக ஈடுபாடு 78% இனால் அதிகரித்துள்ளது. இலங்கையில், மேற்கொள்ளப்படும் குரூப் அழைப்புகளின் எண்ணிக்கை முன்னரை விட நான்கு மடங்கால் அதிகரித்துள்ளது. சமூகத்தில் பார்வையிடும் அளவு 66% இனால் அதிகரித்துள்ளது.

COVID-19 பரவத் தொடங்கியதிலிருந்து, Viber இனால் புதிய சேவைகளின் அறிமுகமும் ஆரம்பமாகியிருந்தது. இதன் பிரகாரம் app இல் முன்னர் காணப்பட்ட ஒரே தடவையில் 5 பேர் அழைப்பில் இருக்கும் வசதி தற்போது 20 பேர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகார அமைப்புகளுடன் இணைந்து, Viber இனால் விசேட சமூக அமைப்புகள் சில நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக பாவனையாளர்களுக்கு தொற்று தொடர்பான உத்தியோகபூர்வ மற்றும் நம்பத்தகுந்த தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையிலும், Viber இனால்  HPB SL Covid-19 எனும் நடவடிக்கை சுகாதார ஊக்குவிப்பு அமைப்புடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளதுடன், இதனூடாக கொரோனாவைரஸ் தொடர்பான பெறுமதி வாய்ந்த மற்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பெருமளவான அங்கத்தவர்களுக்கு பகிரப்படுகின்றன.

மேலும், மக்களுக்கு கொரோனாவைரஸ் தொடர்பான உடனடித் தகவல்களை அறிந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ  WHO botஒன்றை Viber அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக உடனுக்குடன் கொரோனாவைரஸ் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும்.

Rakuten Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகவுவா கருத்துத் தெரிவிக்கையில், ”இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சக ஊழியர்கள் மற்றும் பங்காளர்களை தொடர்ச்சியாக இணைப்பில் வைத்திருப்பதற்கான வழிமுறையை நாம் முன்னெடுக்கின்றோம்.

எமது பாவனையாளர்கள் எம்மில் தங்கியுள்ளனர், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை நாம் தொடர்வதுடன், மக்களை இலவசமாகவும், பாதுகாப்பாகவும் இணைப்பில் வைத்திருக்கும் நடவடிக்கையை முன்னெடுப்போம்.” என்றார்.

Related posts

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

பழவகைகளில் விஷ இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளதா? – சுகாதார அமைச்சு நடவடிக்கை