உலகம்

PUBG நிறுவன பங்குகள் தென் கொரியாவுக்கு

(UTV | தென் கொரியா) – பப்ஜி கேம் (PUBG Game) நிறுவன பங்குகளை தென் கொரியா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மொபைல் விளையாட்டான பப்ஜி சுமார் 2 கோடிக்கும் மேலானோரால் விளையாடப்பட்டு வந்த நிலையில் சீன செயலிகளை தடை செய்யும் போது பப்ஜியும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேம் டெவலப்பர்களில் ஒன்றான டென்செண்ட் நிறுவனம் மற்றும் அதன் அதிகமான பங்குகள் சீனாவுடன் இருப்பதால் பப்ஜி சீன செயலியாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டது.

எனவே, இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் அனுமதி பெறுவதற்கான வேலைகளில் பப்ஜி கேம் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியன. அதன்படி பப்ஜி கேம் நிறுவன பங்குகளை தென் கொரியாவின் பப்ஜி கார்பரேஷன் கைப்பற்றியுள்ளது.

இனி இந்தியாவில் பப்ஜி நிறுவனமே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் பப்ஜியை அனுமதிக்க இந்திய அரசிடம் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கோயில்!

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்