உலகம்

PUBG உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

(UTV | இந்தியா )- இந்தியா முழுவதும் PUBG விளையாட்டு செயலி உட்பட 118 சீன செயலிகளை முடக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐபோன் கைப்பேசிகளில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு முகவர்கள் மூலம் தரவுகளை திருடும் பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய – சீனா இராணுவ மோதலைத் தொடர்ந்து TIKTOK உள்ளிட்ட 58 இற்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதியதொரு பனிப்போரை எதிர்கொள்ள தயாராகும் வடகொரியா!

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுவெல்லா இராஜினாமா