(UTV | கொழும்பு) – கொரோனா பரிசோதனைகளுக்கான நிர்ணய கட்டணம் அதிகரிப்பதற்கான தேவைப்பாடுகள் இல்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உலக சந்தையில் அதன் விலைகளில் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)