வணிகம்

PCR பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலையில் ஆய்வுக்கூடங்கள்

(UTV | கொழும்பு) – தனியார் வைத்தியசாவைகள், பராமரிப்பு நிலையங்களுக்கான சங்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு, இலங்கைக்குள் COVID-19 வைரஸ் தொற்றுவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது சங்கம் தமது உச்ச அளவு ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மூலக்கூறு நோயறிதல் வசதிகளைக் கொண்ட லங்கா ஹொஸ்பிட்டல், ஆசிரி சேர்ஜிகல் மருத்துவமனை, நவலோக்க மற்றும் டேடர்ன்ஸ் ஆகிய தனியார் வைத்தியசாலைகளின் இரசாயன கூடங்களில் அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பொலிமரேஸ் சென் ரியக்ஷன் பரிசோதனை (PCR) COVID-19 வைரஸ் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு அரச சுகாதார பிரிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிககையில் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், இராணுவத் தளபதி ஆகியோருக்கும், தனியார் மருத்துவமனை, பராமரிப்பு நிலையங்களுக்கான சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சுகாதார அமைச்சினால் அன்றாடம் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தனியார் மருத்துவமனை சங்கத்தின் ஒத்துழைப்பை கேட்டுள்ளதுடன் இதற்கு சிறந்த பிரதிபலிப்பை காட்டும் வகையில் தனியார் மருத்துவமனை சங்கம் இந்த சந்தர்ப்பத்தில் இந்த கொள்ளை நோயை ஒழிப்பதற்காக அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய அரசாங்கமும் தனியாரும் ஒன்றிணைந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள COVID-19 சிகிச்சையளிப்பு மத்திய நிலையங்கள், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் மற்றும் ஏனைய அரச அனுமதியுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் சளி மாதிரிகள் மேலே குறிப்பிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் கீழ் தனியார் மருத்துவமனைகள் 4இல் உள்ள ஆய்வுக் கூடங்களில் அரச சுகாதார அதிகாரிகளின் அனைத்து ஆலோசனைகளின் கீழ் அன்றாடம் 100 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளின் ஆய்வுக் கூடங்களில் நடைபெறவுள்ள சகல PCR பரிசோதனைகளும் அரச சுகாதார அதிகாரிகளினால் அனுப்பப்படும் மாதிகரிகள் தொடர்பாக மாத்திரமே மேற்கொள்ளப்படுமென தனியார் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கான சங்கம் மீண்டும் சுட்டிக்காட்டுவதுடன் தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேறு நோய்கள் தொடர்பாக சிகிச்சைப் பெறும் நேயாளர்களுக்காகவும் தேவையான வகையில் PCR பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் லக்கித் பீரிஸ்,

“இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் முகமாக COVID-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மற்றும் தொற்றுவதை தடுப்பதற்காகவும் சுகாதார அமைச்சு மற்றும் COVID-19 வைரஸை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையங்களினால் கொண்டுவரப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்காக தமது சங்க உறுப்பினரான தனியார் மருத்துவமனைகள் மிகுந்த ஆயத்தத்துடன் இருக்கிறார்கள்.

“பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரச சுகாதார சேவைகளின் அழுத்தங்களை குறைந்துக் கொள்வதற்காக தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய நடவடிக்கைகளை சிறந்த விதத்தில் புரிந்துகொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை சந்தோஷத்திற்குரிய காரணமாகும். அத்துடன் இந்த கடினமான வேளையில் அரசுக்காக மேற்கொள்ள வேண்டிய ஏனைய சுகாதார சேவைகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் நிலைநாட்டுவதற்கு விசேடமாக அறுவை சிகிச்சை, அவசர சிகிச்கை ஆகிய சேவைகளை மேற்கொள்வதற்கு தனியார் மருந்துவமனைகளுக்கு முடிவதனால் COVID-19 வைரஸுக்கு எதிராக போராடும் அரச சுகாதார பிரிவுகளுக்கு பாரிய நிவாரணம் வழங்குமென்பதில் ஐயமில்லை.

“அரச சுகாதார பிரிவு, தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியன பரிந்துரை செய்துள்ள நோயாளர்களின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய அனைத்து வழிமுறைகளை இருக்கமாக பின்பற்றி தனியார் மருத்துவமனைகள் நாளில் 24 மணிநேரம் என வாரத்தின் அனைத்து நாட்களிலும்; நோயாளர்கள் எதிர்பார்க்கும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு உத்தரவாதத்துடன் செயற்படும். அத்துடன் அரச சேவைகள் பிரிவு மற்றும் உலக சுகாதார அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கான சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதுடன் அந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்படும்”

எமது அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமன்றி வெளிவாரி மற்றும் உள்ளக சிகிச்சை வசதிகள் வழமையை விட விசேட சேவையை மேற்கொள்வதுடன் அரச சுகாதார பிரிவுகளும் தாங்கள் COVID-19 வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துரித கவனம் செலுத்துவதற்கு எமது நடவடிக்கைகள் மேலதிக உதவியாக இருக்குமென நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு

தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை