உள்நாடு

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV | கொழும்பு) – பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்த வாரம் நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர். சோதனைகள் நடத்தும் 45 வைத்தியசாலைகளும், விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 வைத்தயசாலைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் கொவிட் தொற்று சோதனைகள் வேவ்வெறு விலை விகிதங்களில் முன்னெடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

அதன்படி, ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 5,000 – 9,500 ரூபாவுக்கு இடையிலும், ஆன்டிஜென் சோதனைக்கு 2,000 – 5,900 ரூபா வரையிலும் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். சோதனைகள் நாட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு விலைகளில் நடத்தப்படுவதால், நிலைமையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதன்போதே மேற்கண்ட விடயம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி

டயனாவுக்கு எதிரான மனுவை விசாராணைக்கு!

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor