வணிகம்

Oracle Cloud தொழில்நுட்பத்துடன் வேகமான புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய HNB Assurance ஆயத்தமாகிறது

(UTV|கொழும்பு)- இலங்கையின் முன்னணி வரிசையிலுள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனமான HNB Assurance PLC (HNBA) அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் இலகுவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துவது குறித்தும் அத்துடன் நிதி நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை தமது காப்புறுதியாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக Oracle Cloud Enterprise Resource Planning (ERP) மென்பொருளுடன் இணைந்துள்ளது. ஏழு வாரங்களைக் கொண்ட குறுகிய காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை விசேட அம்சமாகும்.

HNB Assurance தமது சூழலில் இருந்து நடைமுறைப்படுத்தும் ERP கட்டமைப்பிலிருந்து Cloud தீர்வுகளுக்கு மாற்றமடைய காரணம் சந்தைக்கு வேகமாகவும் மற்றும் செயல்திறன் மிக்க தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் புதிய தொழிழ்நுட்பத்துடன் அதன் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு ஆகும். Oracle Cloud ERP உடன், ஆயுள் காப்புறுதி வழங்குவோர் தமது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில், துரிதமாக மற்றும் செயல்திறன் மிக்க விதத்தில் சேவை செய்வதற்கு முடிவதுடன் அதனூடாக காப்புறுதி தயாரிப்பு குழுவை மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டும். இது நிறுவனத்திற்கான சர்வதேச நிதி அறிக்கையிடல் தரம் நிலையில் 17ஆவது ஒழுங்கு விதிகளுக்கு (International Financial Reporting Standards 17 (IFRS) தேவையான விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவியாக உள்ளது.

Oracle மற்றும் அது முன்வைத்த தீர்வுகளினால் நிறுவனம், அதன் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு மற்றும் நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முடிந்துள்ளமையை இட்டு நன்றி கூறவேண்டும். அதன் விளைவாக வெளிப்படையான வர்த்தகத்திலுள்ள அவதானம் குறித்தும் ஒரு சிறந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கும் மற்றும் தற்போது எமக்கு எமது வர்த்தகத்திற்குள் சிறந்த வெளிப்படைத் தன்மையும் உள்ளது. இந்த இரண்டு விடயங்களும் எமது வெற்றிக்கு மிகவும் முக்கியமான இரு கருவிகளாகும்.’ என HNB Assurance மற்றும் இணை நிறுவனமான HNB General Insurance Limitedஇன் முகாமைத்துவம் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லொக்கு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த லொக்கு ஆராச்சி, Oracle Cloud ERP எமக்கு ஒழுங்கு விதி தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமன்றி எமது சீரற்ற செயல்முறைகளை ஒன்றினைப்பதற்கும் உதவியாகவுள்ளது. இதனூடாக நடவடிக்கைகளை செயல்திறனுடன் மேம்படுத்துவதற்கும், எமது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமையான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.’ என தெரிவித்தார். Oracle Cloud ERP தமது ஆயுள் காப்புறுதி தயாரிப்புக்களின் அடிப்படை Appஆக பயன்படுத்தி HNB Assurance நிறுவனத்திற்கு தற்போது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு மற்றும் இலங்கை முழுவதும் தமது சேவைகளை விஸ்தரிப்பதற்கும் முடிந்துள்ளது. புதிய Cloud தொழில்நுட்பத்தினால் நிதித் தீர்வுகளை தன்னியக்கமயமாக்கல் மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வின் ஊடாக தீர்மானங்களை எடுப்பதை மேம்படுத்துதல் போன்ற விடயங்களினால் தகவல் தொழில்நுட்ப சிக்கல்களை குறைப்பதற்கும் மற்றும் சேவையை சிறந்த விதத்தில் மேம்படுத்துவதற்கும் காப்புறுதி வழங்;குநருக்கு முடியும்.

இலங்கையில் காப்புறுதித்துறையை விஸ்தரிப்பதற்காக HNB Assuranceஇன் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் காண்பதற்கு கிடைத்தமையை இட்டு சந்தோஷமடைகிறேன் என Oracleஇன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான App பிரிவு பிரதானி (Head of Applications – Sri Lanka and the Maldives at Oracle) நளின் சிக்குராஜபத்தி கூறுகையில், ‘நவீன Cloude தீர்வு ஊடாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர அறிவு, Chat Box, நடவடிக்கை தன்னியக்க முறைமை மற்றும் மேலும் பல தொழில்நுட்பங்களுக்கு இலகுவான அணுகுமுறையினை பெற்றுக் கொடுக்கையில் வர்த்தகங்கள் செயற்படும் விதங்கள் மாற்றமடையும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Oracle PartnerNetworkஇன் பிளாட்டினம் உறுப்பினரான MillenniumIT ESP இனால் HNB Assuranceற்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

நிதி அமைச்சரின் அறிவிப்பு

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி