உள்நாடு

O/L மாணவி மீதான துஷ்பிரயோகம் குறித்து கல்வி அமைச்சு விசாரணை

(UTV | கொழும்பு) – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை பரீட்சை மண்டப பார்வையாளர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் நேற்று (31) பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி நாச்சதுவ ஹிடோகம களுவில சேனா மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இம்மாணவி தோற்றியுள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் போது வினாத்தாள் ஒன்றிற்கு விடை சொல்லித்தரும் போலிக்காரணத்தின் கீழ் பரீட்சை பார்வையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இதன்படி, மேற்படி விடயங்கள் தொடர்பில் வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கல்வி அமைச்சு அறிக்கை கோரியது.

பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சை மண்டபத் தலைவர், பரீட்சை மண்டப உதவித் தலைவர், குற்றம் சுமத்தப்பட்ட பார்வையாளர் மற்றும் அப்போது பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய பரீட்சார்த்திகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டது.

மேற்படி தகவலின் பிரகாரம் ஹிடோகம பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட கண்காணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நாளை (02) வரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

திணைக்கள மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரம் இரத்து

மாகாண சபையை ஜனாதிபதி கலைக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்