உள்நாடு

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.

(UTV | கொழும்பு) –

2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சைகள் 09.07.2024 முதல் 19.07.2024 வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதில் 169,007 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அழகியல் பாடத்தின் இறுதிப் பெறுபேறுகளை நிர்ணயம் செய்வதற்கு எழுத்து மூல பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகிய இரண்டிலும் பெறப்பட்ட மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுவதால் இதில் தோற்றுவது கட்டாயம் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டு பகுதிகளிலும் தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அந்தப் பாடம் தொடர்பான பெறுபேறுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்

 டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து