அரசியல்உள்நாடு

NPP பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தியினால் தெரிவு செய்யப்பட்ட 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை தேசிய மக்கள் சக்தி பொது நிதியத்திற்கு வழங்குவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவர்களின் பாராளுமன்ற சம்பளம் அவர்களின் தனிப்பட்ட சம்பள கணக்கிலிருந்து பொது நிதிக்கு வரவு வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் வழங்கும் ஆவணத்தில் அனைத்து எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அந்த பொதுநிதியின் பணம் முழுநேர அரசியலில் ஈடுபடுபவர்களின் நலனுக்காகவும், சாதாரண மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் பொது நிதியில் வரவு வைக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியிலும் அதே பாரம்பரியத்தை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரவ பால் கொள்முதலில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க நடவடிக்கை

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறிய மேலும் 9 பேர் கைது

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor