உலகம்

Nike அதன் தயாரிப்பு விற்பனைகளை நிறுத்தியது

(UTV | ரஷ்யா) – உலகப் புகழ்பெற்ற விளையாட்டு ஆடை விற்பனை நிறுவனமான Nike ரஷ்யாவில் வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை கருத்தில் கொண்டு இது நடந்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான நைக் ரஷ்யாவில் 1,000க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, ரஷ்யர்கள் இழக்கும் வேலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் மற்றும் கோகோ கோலா போன்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டுகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ரஷ்ய வர்த்தகத்தை நிராகரிக்கும் நிறுவனங்களுக்கு பதிலாக புதிய ரஷ்ய உள்ளூர் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹாங்காங் அரசும் ஒப்புதல்

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்