உள்நாடு

MV XPRESS PEARL சிதைவுகளை அகற்றும் ஆரம்ப பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் (MV XPRESS PEARL) சிதைவுகளை அகற்றுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) அறிவித்துள்ளது.

கப்பலை அகற்றுவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ள இரண்டு விசேட கப்பல்கள் இரும்பு கம்பிகளை பயன்படுத்தி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹதபுர தெரிவித்திருந்தார்.

இந்நடவடிக்கைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திருமதி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

editor

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை