(UTV | கொழும்பு) – எம்வி எக்ஸ்பிரஸ் பெர்ல் (MV Xpress pearl) கப்பல் விபத்துக்கு உள்ளான காரணத்தால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்பு தொடர்பில் மதிப்பிடும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில பிரிவுகள் இணைந்து இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
இதில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் மதிப்பீட்டு நடவடக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு சில காலம் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.