வகைப்படுத்தப்படாத

MV Xpress pearl : உள்ளூர் ஏஜென்ட் தலைவருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேக நபரை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இவரை 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 1 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணைகளிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

Unemployed graduates tear-gassed

ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்