உள்நாடு

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | அம்பாறை) – கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக்கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

கப்பலில் இருந்து எண்ணைக்கசிவு மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை ஆபத்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

குறித்த கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிக்கு இழுத்துச் செல்ல முடிந்துளளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குவைட்டில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய் கப்பல், 38 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம்(03) தீ விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

2 இலட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த குறித்த கப்பலிலேயே தீப்பரவல் ஏற்பட்டது.

அந்த கப்பலில் 23 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், கப்பலில் இருந்து காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு கடலோடி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

டயனா மோதல் விவகாரம் தொடர்பில் இன்று கூடும் விசாரணைக் குழு!

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

பொதுத் தேர்தல் 2020 : முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு