உள்நாடு

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

(UTV | கொழும்பு) –  தற்போது ‘MT NEW DIAMOND’ கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ காரணமாக இலங்கை கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை. இந்த கப்பல் இப்போது இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததன் படி, ஒருபோதும் கப்பல் இரண்டாக உடையும் அபாயம் இல்லை. இதனை நாம் அறிவித்திருந்த நிலையில் இந்தியாவும் எமக்கு இதனை அறிவித்துள்ளதாக தற்போது (02:45pm) இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கடற்படைத் தளபதி தெரிவித்திருந்தார்.

மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சர்வதேச அளவில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அனைவரும் உதவத் தயார் என்றும் மேலும் குறித்த ஊடக டந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது இலங்கையில் முதல் தடவையாக இடம்பெற்றதொன்றல்ல இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றது. அதற்காக சுமார் 1௦ நாட்கள் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘MT NEW DIAMOND’ என்ற கப்பலில் 2 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் மற்றும் 1700 மெற்றிக் தொன் டீசல் ஆகிவற்றுடன் குவைட்டில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய் கப்பல், 38 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நேற்று(03) தீ விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

கப்பலின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

IMF கைகொடுக்கும் என பிரதமர் நம்பிக்கை

திவுலப்பிட்டிய தொற்றாளர் 400 பேருடன் தொடர்பு

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

editor