உள்நாடு

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

(UTV | கொழும்பு) – MSC Messina கப்பலில் பரவிய தீ கப்பல் ஊழியர்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

MSC Messina கப்பல் தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென் கடற்பரப்பின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, MSC Messina என்ற கொள்கலன் கப்பலில் தீ பரவியது.

1995 ஆம் ஆண்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, லைபீரிய கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த MSC Messina கப்பல், தென் கொரியாவின் டேர்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.

பின்னர் குறித்த கப்பல் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கப்பலில் 28 பணியாளர்கள் உள்ளதுடன், அவர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் – அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவித்தல்

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முதலிடம் -ஜனாதிபதி!