உள்நாடு

‘Molnupiravir’ மாத்திரை இறக்குமதி : அடுத்த வாரம் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு எதிரான மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற மாத்திரையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது குறித்து அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மருந்துப் பொருட்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மெர்க் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தயாரித்துள்ள குறித்த மாத்திரையை இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த உற்பத்தியாளர்களின் உள்ளூர் முகவர்கள் இது தொடர்பாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக மோல்னுபிராவிர் மருந்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை கொரோனா தொழில்நுட்பக் குழு கடந்த 15ஆம் திகதி வழங்கியது.

இந்த மாத்திரை அமெரிக்க மருந்து நிறுவனங்களான Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கொரோனா நோய்க்கான முதல் வைரஸ் தடுப்பு மாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

editor

புதிய பணவியல் விதிகள் நிறைவேற்றப்படும் – பிரதமர்

களனி பாலத்தினூடாக செல்லும் சாரதிகளுக்கான அறிவித்தல்