வகைப்படுத்தப்படாத

Microsoft நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – இணைய வழி தாக்குதல் குறித்து Microsoft நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த தினம் சர்வதேச ரீதியாக சைபர் எட்டக் (cyber-attack) எனப்படும் இணைய தாக்குதல் இடம்பெற்ற நிலையில், இன்று மீண்டும் பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இணைய வழித் தாக்குதலில் 100 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 25 ஆயிரம் கணனி மென்பொருள் கட்டமைப்புகள் பாதிப்படைந்தன.

இந்தநிலையில், இந்த தாக்குதலின் தன்மையை மட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படும் பிருத்தானிய மல்வார் டெக் கணினி பாதுகாப்பு நிபுணர் குழாம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இணைய வழி தாக்குதல் காரணமாக இங்கிலாந்தை சேர்ந்த 48 சுகாதார அமைப்புக்களையும், ஸ்கொட்லாந்தை சேர்ந்த 13 சுகாதார அமைப்புக்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் மீண்டும் சுமார் 150 நாடுகளுக்கு இவ்வாறு இணைய வழி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு Microsoft நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

England win Cricket World Cup

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

UTV MEDIA WORKSHOP REGISTRATION – 2024