வணிகம்

Mandarina Colombo அறிமுகப்படுத்தும் நெலும் கொலே

(UTV|கொழும்பு) – Mandarina வழங்கும் சிறப்பான உணவுகளை எப்போதும் நம்பிகையுடன் அனுபவித்து மகிழ முடியும். விலை தொடர்பில் கரிசனை கொண்ட உணவுப் பிரியர் நீங்கள் எனில் சிறந்த தெரிவு Mandarina ஆகும். இது தற்போது இலங்கை பாரம்பரியத்தில் மேலும் புதுமைகளை புகுத்தியுள்ளது. பிரபலமான நெலும் கொலே உணவு தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். Mandarina இதனை முற்றிலும் புதுப்பித்துள்ளது. இதன் படி 3 வகையான சோறு, 10 வகையான சத்துள்ள கறி வகைகள், 5 நாவூறும் மாமிசங்கள் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விரும்புபவற்றை தெரிவு செய்துகொள்ள முடிவதுடன், சுவையூட்டும் தெரிவுகளும் கிடைக்கின்றன.

Mandarina தனது பிரபல உணவகமான ‘On the Eleventh’ வின் செயற்பாட்டினை மீண்டும் ஆரம்பிப்பதுடன், உண்மையான ஓய்வினை வழங்கும் 80 அறைகளும் மீண்டும் விருந்தினர்களுக்கென திறக்கப்படுகின்றது. Mandarina Colombo, ஹோட்டலானது அசல் இலங்கை மெனுவான ‘நெலும் கொலே’ ஐ, 2020 ஓகஸ்ட் 10 ஆம் திகதி அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்த நகர ஹோட்டலானது, விருந்தினர்களுக்கு அறுசுவையான உள்நாட்டு மதிய உணவு மெனுவினை வழங்குவதன் மூலம் உணவுப் பிரியர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கின்றது. இங்கு விருந்தினர்கள், நட்சத்திர தர ஹோட்டல் பின்னணியில் ‘தாமரை இலை (நெலும் கொலே) இல் பரிமாறப்படும் மதிய உணவின் உண்மையான அர்த்தத்தை அனுபவித்து மகிழ்வார்கள்.

இந்த முற்றிலும் புதிய நெலும் கொலே மெனுவானது நாவூறும் உணவுக்கு உறுதியளிக்கின்றது. இந்த செழுமையான சுவைகள் மற்றும் உள்நாட்டு உணவுகளில் அவர்களது தேர்ச்சிக்கான காரணம் இவற்றில் உபயோகிக்கப்படும் உள்நாட்டு மூலப்பொருட்களாகும்.

கொவிட்டுக்கு பின்னரான சூழ்நிலையில், விருந்தோம்பல் தொழில்துறை மட்டுமன்றி, இதைச் சார்ந்து தமது வாழ்வாதாரங்களைக் கொண்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. Mandarina Colombo, இலங்கையின் முன்னணி பெருநிறுவனமான Macksons Holdings இன் ஒரு பகுதியென்ற வகையில், கொவிட்வின் பின்னரான எமது மறுசீரமைப்பு நோக்கமானது உள்நாட்டு உணவு கலாசாரத்தினை மீள நிறுவுவதற்கான உறுதிப்பாடு மட்டுமன்றி , சமூகத்துக்கு மீள வழங்குவதற்கான வழியாக திகழ்வதுமாகும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். முற்றிலும் புதிய நெலும் கொலே மெனு மட்டுமன்றி, இலங்கையின் முதலாவது Hotel Drive-Through போன்ற விருந்தினர்களைக் கவரும் மேலும் பல கவர்ச்சியான ஊக்குவிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தும் செயற்பாட்டில் நாம் ஈடுபட்டுள்ளோம்,” என Mandarina Colomboவின் பொதுமுகாமையாளர், தினேஷ் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Mandarina வின் உள்நாட்டு விநியோகஸ்தர்கள் நாடு முழுவதிலும் பரந்துள்ளனர். இதில் மூலப்பொருட்கள் வட மேல் மாகாணத்தில் உள்ள கும்புக்கேவிலிருந்தும், தினசரி காய்கறிகள் மற்றும் தாமரை இலைகள் கொழும்பின் புறநகர் பகுதிகள், பண்டாரகம மற்றும் மேலும் பல இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

“குறிப்பாக நெலும் கொலே மெனுவின் ஊடாக , எமது மதிய உணவு மெனுவானது பல தரப்பட்ட அசல் உள்நாட்டு உணவுகளை வழங்குவதுடன், மூலப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் அலங்கார பட்டிக் என அனைத்தும் இலங்கையின் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து விநியோகிக்கப்படுகின்றது. எனவே, ஒரு உள்நாட்டு நிறுவனமாக, இந்த சூழலில், எங்கள் சமூக பொறுப்புணர்வு கடமைகளின் ஓர் அங்கமாக, இலங்கை சமூகத்திற்கு எங்கள் மட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்க முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், ஹோட்டலொன்றுக்கு உணவானது மேலதிக இணைப்பாகும். எனவே எமது உணவு மற்றும் புதுமையான சுவை தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம்,” என ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

Mandarina Colombo விற்கு வாரநாட்களில் நண்பகல் 12 மணி முதல் 3 மணிக்கு இடையில் வருகை தந்து இந்த புதிய ‘நெலும் கொலே’வினை முயற்சி செய்து பாருங்கள்.

Related posts

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம்