(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்போட்டித் தொடரின் ஆரம்ப போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி சூரியவெவ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![](https://srilankacricket.lk/wp-content/uploads/2021/10/IMG-20211013-WA0017.jpg)