விளையாட்டு

LPL ஏலம் 29ம் திகதியன்று

(UTV | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரானது டிசம்பர் 04ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடைபெறும். போட்டிக்காக 677 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு செப்டம்பர் 24ம் திகதி முதல் செப்டம்பர் 5ம் திகதி நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியினை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

இம்மாதம் 29 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட வீரர்களில் இருந்து சுமார் 200 சிறந்த வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு எல்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த போட்டி ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட் 22ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஜூன் 21ம் திகதி முதல் ஜூன் 27ம் திகதி வரை முதல் முறையாக நடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய மகளிர் அணி வெற்றி

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!