அரசியல்உள்நாடு

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

(UTV | கொழும்பு) – புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஏலவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் நியமிக்கப்பட்ட இந்த. மாகாணங்களுக்கான ஆளுநகர்களை நீண்ட போரட்டத்தின் பின் நீக்கி ஜனாதிபதி புதிய ஆளுநர்களை இன்று நியமித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

editor

அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான திகதி நிர்ணயம்