விளையாட்டு

LPL தொடரில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள்

(UTV | கொழும்பு) –  பாடசாலை மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் Jaffna ஸ்டேலின் அணியின் ஊடாக யாழ்பாணத்திலுள்ள இளம் வீரர்கள் மூவர் நடைபெறவுள்ள லங்க பிரிமியர் லீக் போட்டியில் விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கிரிக்கெட் வீரர்களான டினோஷான் (18 வயது), விஜயகாந்தன் (19 வயது)> மற்றும் கனகரத்னம் கபில்ராஜ் (21 வயது) ஆகியோர் கலந்து கொண்டனர்

‘யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர்கள் பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதனால் Jaffna ஸ்டேலியன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் வீரர்களுக்குள் பெரும் உற்சாகமும் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் முன்னோக்கிச் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் குறித்து பெரியோர்களுக்கும் புரிந்துணர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இதுவொரு முதல் படியாக அமையுமென நான் நினைக்கிறேன். திசர பெரேராவின் தலைமைதுவதிலும் மற்றும் திலின கண்டம்பியின் பயிற்சியிலும் இந்த போட்டித் தொடரில் புரட்சியை ஏற்படுத்த எம்மால் முடியுமென நான் நம்புகிறேன். உரிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இல்லாத போதிலும் முழு திறைமைகளையும் வெளிக் காட்டி இந்த நிலைமைக்கு வந்துள்ள இந்த மூன்று யாழ்ப்பாண வீரர்கள் குறித்தும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்குவதன் ஊடாக சர்வதேச மட்டத்திலான வீரர்களை உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் துயககயெ ஸ்டேலியன் அணியின் மூலோபாய அதிகாரி ஆனந்தன் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன, ‘இலங்கை முழுவதிலும் பரந்து கிடக்கும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் முன் வந்து தமது திறமைகளை காட்டுவதற்கு இந்த போட்டித் தொடர் பாரிய ஒரு தளமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. Jaffna ஸ்டேலியன் அணி காட்டியுள்ள இந்த சிறந்த ஒத்துழைப்பு ஏனைய அணிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.’ என தெரிவித்தார்.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ள IPG நிறுவனத்தின் பிரதம நிறைபேற்று அதிகாரி அனில் மொஹான் கருத்து தெரிவிக்கையில், ‘லங்கா பிரிமியர் லீக்குடன் நாட்டிலுள்ள கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சரித்திர ஏடுகளில் புதிய ஒரு அத்தியாயமாக இது இருக்குமென நான் தனிப்பட்ட விதத்தில் நம்புகிறேன். Jaffna ஸ்டேலியன்னினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பெரிய வேலையின் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் இலங்கை முழுவதிலும் இந்த போட்டித் தொடர் குறித்து ஒரு மதிப்பை ஏற்படுத்துவதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் லசித் மாலிங்கவிற்கு கிடைத்துள்ள கௌரவம் -[VIDEO]

சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக IPL கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி