உள்நாடு

ISநபர்களை வழிநடாத்திய புஷ்பராஜ் கைது!

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக இவரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் திட்டங்கள்

முன்னதாக ஐ எஸ் ஐ எஸ் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்களும் கொழும்பில் இருந்து சென்னை ஊடாக அஹமதாபாத் விமான நிலையத்துக்கு சென்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்த அபு என்பவரின் கட்டளைப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று இந்திய பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். 

Related posts

ரிஷாட் சார்பிலான் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்க கூடாது – டக்ளஸ் தேவானந்தா

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்