விளையாட்டு

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

(UTV |  சென்னை) – ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நடப்பாண்டு சீசனில் உள்ள எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்ட இந்த முடிவு, பிசிசிஐயின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாக எடுக்கப்பட்டது. போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட செப்டம்பா் – அக்டோபா் காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழைக் காலம் இருப்பதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அந்நிய நாட்டு வீரா்கள் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு கொரோனா சூழலில் மிகுந்த சிரமத்துடன் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினா். எனவே இந்த சூழலில் அவா்கள் மீண்டும் பயணித்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பது பிசிசிஐக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையாகும்.

எனவே, தங்களது தரப்பில் இருக்கும் எஞ்சிய வீரா்களைக் கொண்டு போட்டிக்கான அணியை தயாா் செய்யுமாறு அந்தந்த அணி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக பிசிசிஐ – அணி நிா்வாகத்தினா் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறலாம்.

உலகக் கிண்ண டி20 : இதனிடையே, நடப்பாண்டில் இந்தியாவில் அக்டோபா் – நவம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கும் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி தொடா்பாக முடிவெடுக்க ஜூலை முதல் வாரம் வரை ஐசிசியிடம் அவகாசம் கோருவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அத்துடன் அந்தப் போட்டிக்காக ஐசிசி வரிச்சலுகை கோருவது தொடா்பாக மத்திய அரசிடம் பேசவும் பிசிசிஐ தயாராகியுள்ளது. வரி விலக்கு கிடைக்காத பட்சத்தில் பிசிசிஐக்கு 900 கோடி நஷ்டமாகும்.

ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி தொடங்கியது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பயோ – பபுள் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டிய வகையில் வீரா்களிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பினரின் நலன் கருதி ஐபிஎல் போட்டியை ஒத்தி வைப்பதாக மே 4 ஆம் திகதி பிசிசிஐ அறிவித்தது.

Related posts

பெர்லின் மரத்தன் போட்டி ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலி : மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் விலகல்

எகிப்தை வீழ்த்தியது ரஷ்யா