விளையாட்டு

IPL 2021 : இலங்கை அணியின் 09 வீரர்கள் சாத்தியம்

(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று(18) நடைபெறுகிறது.

சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் விலை பேசப்பட உள்ளனா். அதில் 164 போ் இந்தியா்கள், 125 போ் வெளிநாட்டு வீரா்கள், 3 போ் உதவி நிலையிலான வீரா்கள் என ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளது.

8 அணிகள் இடையிலான 14-வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரை எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கட் சபை திட்டமிட்டுள்ளது.

இந்த தொடரில் இலங்கை அணியின் 09 வீரர்கள் விளையாடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

பதவி விலகத் தயார் – லசித்

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது