விளையாட்டு

IPL முதல் போட்டியில் வென்ற ரோயல் செலஞ்சர்ஸ்

(UTV | இந்தியா) –  2021 ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

இதேவேளை, ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 

Related posts

சுதந்திர வெற்றிக்கிண்ண தொடரில் இன்று இந்தியா – பங்களாதேஷ்

மரடோனாவுக்கு ட்ரிப்யூட் செய்த மெஸ்ஸிக்கு அபராதம்

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி