விளையாட்டு

IPL போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

(UTV|INDIA)-IPL கிரிக்கெட்டின் 4 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற 5 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசஸ் ஹைதரபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்பிரகாம் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

சஞ்சு சம்சன் மாத்திரம் 49 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொண்டார்.

ஏனைய வீரர்கள் 20 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 15.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விதிர்மன் சஹா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும், ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வழிவகுத்தது.

ஷிகர் தவான் 57 பந்துகளில் 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

இதேவேளை IPL தொடரின் 6 ஆவது போட்டியில் இன்று சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியை காண வரும் இரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் IPL போட்டியை நடத்தக்கூடாது என தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கட்சியின் தலைவர்கள் சிலர், போட்டி மைதானத்தை முற்றுகையிடுவதாக அறிக்கை விடுத்துள்ளதால், வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரசிகர்கள் குடிநீர் போத்தல்கள், பதாகைகள், கமரா என்பன கொண்டு செல்லப்படக் கூடாது என 50 க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் டி.ஸ் சேனானாயக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு